• May 05 2024

சர்வதேசத்திடம் பிச்சை எடுத்து கொண்டாட்டம் தேவையா – கேள்வி எழுப்பிய எம்.பி.!

Sharmi / Feb 3rd 2023, 9:31 am
image

Advertisement

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 200 மில்லியன் ரூபா நிதியினை  சர்வதேசத்திடமிருந்து யாசகம் பெற்று,75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

அரச செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. சுதந்திர தினத்தை கௌரமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அக்கிராசன உரையாற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற குழுக்களை மீண்டும் நியமிக்க வேண்டுமாயின் பாரிய நிதி செலவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச செலவுகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மாறாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து நாடாளுமன்ற செலவுகளை பல மடங்கு பெருப்பித்துள்ளார்.

சர்வதேசத்திடம் பிச்சை எடுத்து கொண்டாட்டம் தேவையா – கேள்வி எழுப்பிய எம்.பி. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 200 மில்லியன் ரூபா நிதியினை  சர்வதேசத்திடமிருந்து யாசகம் பெற்று,75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா கேள்வி எழுப்பியுள்ளார்.சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.அரச செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. சுதந்திர தினத்தை கௌரமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அக்கிராசன உரையாற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற குழுக்களை மீண்டும் நியமிக்க வேண்டுமாயின் பாரிய நிதி செலவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச செலவுகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மாறாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து நாடாளுமன்ற செலவுகளை பல மடங்கு பெருப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement