• May 05 2024

தடைவிதிப்பது பொலிசாரின் கடமை..! போராட்டங்களை நடத்துவது எமது உரிமை...! தடுத்தால் தடுக்கட்டும்.! கொதிக்கும் ஜேவிபி..!samugammedia

Sharmi / Jun 8th 2023, 11:06 am
image

Advertisement

நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்களுக்கு தடை விதிப்பது என்பது பொலிஸ் அதிகாரிகளின் வழமையான பாரம்பரிய செயற்பாடாகவுள்ளதாகவும் அது பொலிசாரின் கடமை எனவும் போராட்டங்களை நடத்துவது தமது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, மக்களின் கருத்துக்கு இடமளிக்கும் நோக்கில் இன்று தொடக்கம் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று தொடக்கம் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து இதனை நடத்துகிறோம்.  தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.

காலவரையின்றி தேர்தல் தள்ளிப்போனதற்கு காரணம் பணப்பற்றாக்குறை. பொருளாதாரம் கஷ்டம் என்று கூறலாம். ஆனால் இன்று பொருளாதாரம் பலம், ரூபாய் பலம் என மற்ற எல்லா விவகாரங்களிலும் அரசு நாடகமாடுகிறது.

தேர்தலை நடத்துவது மட்டுமே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு பாரிய பொறுப்பு உள்ளது என நம்புகின்றோம்.சுயேட்சையான தேர்தல்கள் ஆணைக்குழு இன்று சுயாதீனமாக செயற்படவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான செயற்பாடுகளை உடனடியாக தயார்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். அரசு அமைதியான கொள்கையை கடைபிடித்தால், நாடு முழுவதும் இதை ஏற்பாடு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

தடைவிதிப்பது பொலிசாரின் கடமை. போராட்டங்களை நடத்துவது எமது உரிமை. தடுத்தால் தடுக்கட்டும். கொதிக்கும் ஜேவிபி.samugammedia நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.போராட்டங்களுக்கு தடை விதிப்பது என்பது பொலிஸ் அதிகாரிகளின் வழமையான பாரம்பரிய செயற்பாடாகவுள்ளதாகவும் அது பொலிசாரின் கடமை எனவும் போராட்டங்களை நடத்துவது தமது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, மக்களின் கருத்துக்கு இடமளிக்கும் நோக்கில் இன்று தொடக்கம் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று தொடக்கம் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.குறிப்பாக தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து இதனை நடத்துகிறோம்.  தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. காலவரையின்றி தேர்தல் தள்ளிப்போனதற்கு காரணம் பணப்பற்றாக்குறை. பொருளாதாரம் கஷ்டம் என்று கூறலாம். ஆனால் இன்று பொருளாதாரம் பலம், ரூபாய் பலம் என மற்ற எல்லா விவகாரங்களிலும் அரசு நாடகமாடுகிறது. தேர்தலை நடத்துவது மட்டுமே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு பாரிய பொறுப்பு உள்ளது என நம்புகின்றோம்.சுயேட்சையான தேர்தல்கள் ஆணைக்குழு இன்று சுயாதீனமாக செயற்படவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது.உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான செயற்பாடுகளை உடனடியாக தயார்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். அரசு அமைதியான கொள்கையை கடைபிடித்தால், நாடு முழுவதும் இதை ஏற்பாடு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement