• May 05 2024

யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு!

Sharmi / Jan 19th 2023, 10:18 am
image

Advertisement

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

 இதன்போது 24 உறுப்பனர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர்.  கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளைக் கோரினார். 

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டது.  இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பி ஐச் சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர். 

இதனைத் தொடர்ந்து தெரிவைக் கொண்டு நடாத்திவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.


யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.  இதன்போது 24 உறுப்பனர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர்.  கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளைக் கோரினார். தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டது.  இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பி ஐச் சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தெரிவைக் கொண்டு நடாத்திவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement