• May 05 2024

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு! samugammedia

Chithra / Aug 22nd 2023, 1:10 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது.

ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம் என வைத்தியசாவை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நிலவும் குருதித் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தங்கள் ஊர்களிலும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தால் தாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0772105375 அல்லது 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு samugammedia யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது.தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது.ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம் என வைத்தியசாவை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே நிலவும் குருதித் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தங்கள் ஊர்களிலும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தால் தாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அத்துடன், 0772105375 அல்லது 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement