• May 05 2024

யாழ். மாநகர முதல்வர் இராஜினாமா விவகாரம் : ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அட்வைஸ்!

Sharmi / Jan 5th 2023, 3:35 pm
image

Advertisement

யாழ். மாநகர முதல்வர் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சட்டம் எதைச் சொல்கிறதோ அதை செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் குலேந்திரன் (குயிலன்) தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பங்குபற்றிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்கள் பங்கு பெற்ற வேண்டிய தேவை இல்லை. இருந்து ஆளுநர் அழைத்ததன் காரணமாக மரியாதை நிமித்தம் அவருடைய செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருடன் மாநகர சபை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினோம்.

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறு பதவி விலகல் இடம் பெற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக உள்ளூராட்சி ஆணையாளர் செயற்படும் நிலையில் அவரே குறித்த விடயங்களை கையாள வேண்டும்.

புதிய முதல்வரை தேர்வு செய்வதா? இல்லையா என உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியாத நிலையில் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சட்டம்இ மாநகர முதல்வர்  பதவி தொடர்பில் என்ன கூறுகிறதோ அதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இவ்வாறு முதல்வர் பதவி இழந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டதாக அறிகின்றேன்.

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திற்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ள நிலையில் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உயர் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆளுநரின் செயலாளருடனான சந்திப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற பெயருடன் கடிதம் ஒன்று வழங்கப்பட்டதை அவதானித்தேன்.

யார் இந்த கடிதத்தை வழங்கியது என ஆளுநரின் செயலாளரை வினவியபோது அதை வழங்கிய உறுப்பினர் தாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எனக் குறிப்பிட்டார்.

கடிதத் தலைப்பில் முரண்பாடுகள் உள்ள நிலையில் ஆளுநர் செயலாளர் அவ்வாறு வழங்கிய கடிதத்தை ஏற்றிருக்கக் கூடாது.

ஆகவே மாநகர முதல்வர் விவகாரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் கருத்தை விடுத்து சட்டம் எதை கூறுகிறதோ அதை நிறைவேற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


யாழ். மாநகர முதல்வர் இராஜினாமா விவகாரம் : ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அட்வைஸ் யாழ். மாநகர முதல்வர் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சட்டம் எதைச் சொல்கிறதோ அதை செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் குலேந்திரன் (குயிலன்) தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பங்குபற்றிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,குறித்த கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்கள் பங்கு பெற்ற வேண்டிய தேவை இல்லை. இருந்து ஆளுநர் அழைத்ததன் காரணமாக மரியாதை நிமித்தம் அவருடைய செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருடன் மாநகர சபை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினோம்.யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறு பதவி விலகல் இடம் பெற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக உள்ளூராட்சி ஆணையாளர் செயற்படும் நிலையில் அவரே குறித்த விடயங்களை கையாள வேண்டும்.புதிய முதல்வரை தேர்வு செய்வதா இல்லையா என உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியாத நிலையில் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சட்டம்இ மாநகர முதல்வர்  பதவி தொடர்பில் என்ன கூறுகிறதோ அதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்.கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இவ்வாறு முதல்வர் பதவி இழந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டதாக அறிகின்றேன்.இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திற்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ள நிலையில் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உயர் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.அதுமட்டுமல்லாது ஆளுநரின் செயலாளருடனான சந்திப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற பெயருடன் கடிதம் ஒன்று வழங்கப்பட்டதை அவதானித்தேன்.யார் இந்த கடிதத்தை வழங்கியது என ஆளுநரின் செயலாளரை வினவியபோது அதை வழங்கிய உறுப்பினர் தாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எனக் குறிப்பிட்டார்.கடிதத் தலைப்பில் முரண்பாடுகள் உள்ள நிலையில் ஆளுநர் செயலாளர் அவ்வாறு வழங்கிய கடிதத்தை ஏற்றிருக்கக் கூடாது.ஆகவே மாநகர முதல்வர் விவகாரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் கருத்தை விடுத்து சட்டம் எதை கூறுகிறதோ அதை நிறைவேற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement