• May 04 2024

காணி அபகரிப்பு; வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேசவேண்டும் – சார்ள்ஸ் வலியுறுத்து samugammedia

Chithra / Apr 5th 2023, 11:16 am
image

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 

தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

ஆட்சியாளர்கள் எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல்சேவையை ஆரம்பித்தால் பல செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

காணி அபகரிப்பு; வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுடன் ஜனாதிபதி பேசவேண்டும் – சார்ள்ஸ் வலியுறுத்து samugammedia வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.ஆட்சியாளர்கள் எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல்சேவையை ஆரம்பித்தால் பல செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement