• Nov 23 2024

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - 100 பேர் பலி!

Anaath / May 24th 2024, 3:58 pm
image

பப்புவா நியூ கினியாவில் நேற்று  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் 

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - 100 பேர் பலி பப்புவா நியூ கினியாவில் நேற்று  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள எங்கா மாகாணத்தின் காகலம் கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement