• May 05 2024

யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்-காரணம் என்ன..?

Tamil nila / Dec 24th 2022, 9:55 pm
image

Advertisement

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.



நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை சந்திப்பில் ஈடுபட்டனர்.


குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின்செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டனர்.



இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல்,ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்-காரணம் என்ன. தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை சந்திப்பில் ஈடுபட்டனர்.குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின்செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டனர்.இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல்,ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement