• May 04 2024

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை! - அரசு வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 17th 2023, 6:23 pm
image

Advertisement

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 185 உறுப்பினர்களும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர். மூன்று பேர் வாக்களிக்கவில்லை. 


இந்த வாக்கெடுப்பு பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் மட்டும் தான்.

இதேபோல் எல்.ஜி.பி.டி.க்யூ.+ சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றொரு சட்டத்திற்கும் ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை - அரசு வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது.மசோதாவுக்கு ஆதரவாக 185 உறுப்பினர்களும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர். மூன்று பேர் வாக்களிக்கவில்லை. இந்த வாக்கெடுப்பு பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் மட்டும் தான்.இதேபோல் எல்.ஜி.பி.டி.க்யூ.+ சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றொரு சட்டத்திற்கும் ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement