• May 18 2024

தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் - மாவை தெரிவிப்பு samugammedia

Chithra / Jul 9th 2023, 7:53 am
image

Advertisement

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை  மற்றும் 13வது திருத்தம் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின்  மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், 

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை, இன விடுதலைக்கான  தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உள்ளோம்.

குறித்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் திரும்பி வந்ததும் கட்டாயம் அந்த கடிதம் அனுப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் - மாவை தெரிவிப்பு samugammedia தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை  மற்றும் 13வது திருத்தம் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின்  மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவிக்கையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை, இன விடுதலைக்கான  தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உள்ளோம்.குறித்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் திரும்பி வந்ததும் கட்டாயம் அந்த கடிதம் அனுப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement