• May 05 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்காது; அது உறுதி! - ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Apr 20th 2023, 9:17 am
image

Advertisement

"இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது." - இவ்வாறு கூறியுள்ளார் ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி.

அவர் மேலும் கூறுகையில்,

"எங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் வரலாம். பரவாயில்லை. மக்களுக்காக - இந்த நாட்டுக்காக அனைத்தையும் தாங்கிக்கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

எப்படியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்காது. அது உறுதி. இருந்தும், தேர்தலைப் பெறுவதற்காக நாம் போராடுவோம்.

இந்த அரசுக்குப் பணம் ஒரு பிரச்சினை இல்லை. பணம் இல்லாமையால் தேர்தலை ஒத்திப்போடவில்லை. தோல்விப் பயத்தால்தான் தேர்தலை ஒத்திப்போடுகின்றார்கள்.

தேர்தல் மக்களின் உரிமை. அதை அவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும். அதை மறுக்கும் உரிமை இந்த அரசுக்குக் கிடையாது. தேர்தல் நடக்கும் வரை போராடுவோம்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எங்களால் மட்டுமே முடியும். எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது. மக்கள் எங்களுக்குத் தருவது ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை நாங்கள் புரிந்துகொண்டே வேலை செய்கின்றோம்." - என்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்காது; அது உறுதி - ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் samugammedia "இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது." - இவ்வாறு கூறியுள்ளார் ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி.அவர் மேலும் கூறுகையில்,"எங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் வரலாம். பரவாயில்லை. மக்களுக்காக - இந்த நாட்டுக்காக அனைத்தையும் தாங்கிக்கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம்.எப்படியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்காது. அது உறுதி. இருந்தும், தேர்தலைப் பெறுவதற்காக நாம் போராடுவோம்.இந்த அரசுக்குப் பணம் ஒரு பிரச்சினை இல்லை. பணம் இல்லாமையால் தேர்தலை ஒத்திப்போடவில்லை. தோல்விப் பயத்தால்தான் தேர்தலை ஒத்திப்போடுகின்றார்கள்.தேர்தல் மக்களின் உரிமை. அதை அவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும். அதை மறுக்கும் உரிமை இந்த அரசுக்குக் கிடையாது. தேர்தல் நடக்கும் வரை போராடுவோம்.இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எங்களால் மட்டுமே முடியும். எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது. மக்கள் எங்களுக்குத் தருவது ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை நாங்கள் புரிந்துகொண்டே வேலை செய்கின்றோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement