• May 18 2024

3,000 பேரை ஏமாற்றிய நபர் - 275 கடவுச்சீட்டுக்களுடன் வசமாக சிக்கினார்..! samugammedia

Chithra / Jun 14th 2023, 10:39 am
image

Advertisement

தென் கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் வசூலித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பேராதனை, கட்டம்பே பிரதேசத்தில் குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற போதிலும், தென்கொரியாவில் தொழில் வழங்குவதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு நபர்களின் 275 கடவுச்சீட்டுக்கள், 615 வேலை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் நற்சான்றிதழ்கள், கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய கோப்பு, கொரியாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதைக் குறிக்கும் பதாதைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், சந்தேகநபரின் மோசடியில் 3000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

3,000 பேரை ஏமாற்றிய நபர் - 275 கடவுச்சீட்டுக்களுடன் வசமாக சிக்கினார். samugammedia தென் கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் வசூலித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பேராதனை, கட்டம்பே பிரதேசத்தில் குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற போதிலும், தென்கொரியாவில் தொழில் வழங்குவதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு நபர்களின் 275 கடவுச்சீட்டுக்கள், 615 வேலை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் நற்சான்றிதழ்கள், கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய கோப்பு, கொரியாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதைக் குறிக்கும் பதாதைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.மேலும், சந்தேகநபரின் மோசடியில் 3000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement