ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பான உண்மைகளை தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.
பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறான நிலையில் இருந்தால், பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் மூடப்படும் நிலையில் பல பாடசாலைகள் - பிரதமர் எடுத்த முடிவு ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.இக்கலந்துரையாடலில் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பான உண்மைகளை தெரிவித்துள்ளார்.மேலும், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறான நிலையில் இருந்தால், பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.