• May 05 2024

"தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்"- மேர்வின் சில்வாவின் கருத்தானது மீண்டுமொரு இனக்கலவரத்தை தூண்டுகின்றது - தம்பிராசா! samugammedia

Tamil nila / Aug 18th 2023, 9:55 pm
image

Advertisement

"தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்"-  மேர்வின் சில்வாவின் கருத்தானது மீண்டுமொரு  இனக்கலவரத்தை தூண்டுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார். 

இன்று யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இனப்படுகொலை செய்த ராஜபக்ச கூட்டத்துடன் அணிவகுத்த மேர்வின் சில்வா தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டுவருவேன் என பொதுவெளியில் கூறியுள்ளார்.  இக் கருத்தானது மீண்டுமொரு  இனக்கலவரத்தை ஆரம்பிக்க தூண்டுகின்ற விதத்திலுள்ளது.

ஒரு இன மக்களைக் கொலை கொய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாதா என்ற கேள்வி எழுகிறது.  இக்  கருத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேர்வின் சில்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த தவறியுள்ளது.

பௌத்த மதத்தை விமர்சித்தல் , தேசிய கீதத்தை விமர்சித்தல் மற்றும் முகநூல்  கருத்துக்களை வெளியிட்டவர்களை உடன் கைது செய்யும் பொலிஸ் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களை எச்சரிக்கை செய்த மேல்வின் சில்வாவை கைது செய்யவில்லை.  தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மற்றும்  அரசுடன் நல்லிணக்கத்துடன் செயற்படுபவர்கள் அனைவருக்கும் தமிழர்கள் பொதுவானவர்களே.  

மேர்வின் சில்வாவை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த தமிழர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் பௌத்த  மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது  இருப்பை பாதுகாக்கவே போராடி வருகின்றோம்.

இதேவேளை மக்களைப் பாதுகாப்பதற்காக பல கோடி செலவில் இயங்கும் பொலிஸ் திணைக்களம் உட்பட ஏனையவை அரசைப் பாதுகாக்கும் நடவடிக்கையையே  மேற்கொள்கின்றன.

இதேவேளை சம காலத்தில்  வடகிழக்கு மாகாணங்கள் உட்படமலையகப் பகுதிகளில் தரங் குறைவான பொருட்கள் நுகர்வோருக்கு விறபனையாகின்றன.  சில பொருட்களின் விலை உள்ளடங்கலான  பிரதான விடயங்கள் உறுதிப்படுத்தப்படாது விற்பனை செய்யப்படுகின்றன. 

இவை தொடர்பில் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபை மற்றும் பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்கள் உரிய கவனஞ் செலுத்த வேண்டும்.  இ்வ் விடயத்தில் அரசாங்க அதிபரும் குறித்த தரப்பு  உரிய கடமைகளை நிறைவேற்றுகின்றார்களா என கண்காணிக்க வேண்டும் -எனத் தெரிவித்தார்.


"தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்"- மேர்வின் சில்வாவின் கருத்தானது மீண்டுமொரு இனக்கலவரத்தை தூண்டுகின்றது - தம்பிராசா samugammedia "தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்"-  மேர்வின் சில்வாவின் கருத்தானது மீண்டுமொரு  இனக்கலவரத்தை தூண்டுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,இனப்படுகொலை செய்த ராஜபக்ச கூட்டத்துடன் அணிவகுத்த மேர்வின் சில்வா தமிழர்களின் தலையைக் கொய்து கொண்டுவருவேன் என பொதுவெளியில் கூறியுள்ளார்.  இக் கருத்தானது மீண்டுமொரு  இனக்கலவரத்தை ஆரம்பிக்க தூண்டுகின்ற விதத்திலுள்ளது.ஒரு இன மக்களைக் கொலை கொய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாதா என்ற கேள்வி எழுகிறது.  இக்  கருத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேர்வின் சில்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த தவறியுள்ளது.பௌத்த மதத்தை விமர்சித்தல் , தேசிய கீதத்தை விமர்சித்தல் மற்றும் முகநூல்  கருத்துக்களை வெளியிட்டவர்களை உடன் கைது செய்யும் பொலிஸ் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களை எச்சரிக்கை செய்த மேல்வின் சில்வாவை கைது செய்யவில்லை.  தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மற்றும்  அரசுடன் நல்லிணக்கத்துடன் செயற்படுபவர்கள் அனைவருக்கும் தமிழர்கள் பொதுவானவர்களே.  மேர்வின் சில்வாவை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த தமிழர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழர்கள் பௌத்த  மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது  இருப்பை பாதுகாக்கவே போராடி வருகின்றோம்.இதேவேளை மக்களைப் பாதுகாப்பதற்காக பல கோடி செலவில் இயங்கும் பொலிஸ் திணைக்களம் உட்பட ஏனையவை அரசைப் பாதுகாக்கும் நடவடிக்கையையே  மேற்கொள்கின்றன.இதேவேளை சம காலத்தில்  வடகிழக்கு மாகாணங்கள் உட்படமலையகப் பகுதிகளில் தரங் குறைவான பொருட்கள் நுகர்வோருக்கு விறபனையாகின்றன.  சில பொருட்களின் விலை உள்ளடங்கலான  பிரதான விடயங்கள் உறுதிப்படுத்தப்படாது விற்பனை செய்யப்படுகின்றன. இவை தொடர்பில் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபை மற்றும் பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்கள் உரிய கவனஞ் செலுத்த வேண்டும்.  இ்வ் விடயத்தில் அரசாங்க அதிபரும் குறித்த தரப்பு  உரிய கடமைகளை நிறைவேற்றுகின்றார்களா என கண்காணிக்க வேண்டும் -எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement