• Mar 30 2025

ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை- அமைச்சர் சந்திரசேகர் உறுதி..!

Sharmi / Mar 27th 2025, 10:47 am
image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்றையதினம்(26) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்துகளை கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையிலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியிருந்ததுடன் இதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.




 

ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை- அமைச்சர் சந்திரசேகர் உறுதி. அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்றையதினம்(26) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்துகளை கேட்டறிந்துகொண்டார்.இந்நிலையிலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியிருந்ததுடன் இதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement