• May 18 2024

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள்! SamugamMedia

Chithra / Feb 16th 2023, 9:52 am
image

Advertisement

2023ம் ஆண்டில் 10 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 545 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 18 ஆயிரம் பேர் இலங்கை வந்துள்ளனர்.

2019ம் ஆண்டு கொவிட்-19 பரவல் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கைக்கு 1.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்தனர்.

அந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் SamugamMedia 2023ம் ஆண்டில் 10 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 545 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 18 ஆயிரம் பேர் இலங்கை வந்துள்ளனர்.2019ம் ஆண்டு கொவிட்-19 பரவல் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கைக்கு 1.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்தனர்.அந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement