• Sep 08 2024

மூன்று படகுகளில் தனுஷ்கோடியில் வந்திறங்கிய 10க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்களால் பரபரப்பு! ssamugammedia

Chithra / Oct 22nd 2023, 1:33 pm
image

Advertisement


மூன்று படகுகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி அரச்சல்முனை பகுதிக்கு சென்றமையால் அங்கு பரபரப்பு நிலவியதாக தெரியவருகின்றது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் பகுதியைச் சேர்ந்த  மூவர்  தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாக்ஜலசந்தி கடலை நீந்தி  செல்வதற்காக 12 பேர் அடங்கிய குழுவுடன் நேற்று மாலை 4 மணி அளவில் தலைமன்னாரிலிருந்து மூன்று பைபர் படகுகளில் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள்  சரியாக இரவு  11  மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

இதையடுத்து, தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், இலங்கையில் இருந்து  அகதிகள் அல்லது சட்டவிரோதமாக இளைஞர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவிட்டார்கள் என்ற சந்தேகத்தில், மரைன் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு  கொடுத்த தகவலின் அடிப்படையில்,  தனுஷ்கோடி அரிச்சல்முனை  சென்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்த இலங்கை இளைஞர்களை  விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் இலங்கை - இந்திய அரசிடம் முழு அனுமதி பெற்று தனுஷ்கோடியில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்காக 3 பைப்பர் படகுகளில் தனுஷ்கோடி வந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து மூன்று இளைஞர்களும் மன்னார் நோக்கி நீந்த தொடங்கியுடன், உடன் வந்த குழு நீந்தி செல்பவர்களுக்கு உதவிகளை செய்துள்ளனர் என தெரியவருகின்றது.


மூன்று படகுகளில் தனுஷ்கோடியில் வந்திறங்கிய 10க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்களால் பரபரப்பு ssamugammedia மூன்று படகுகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி அரச்சல்முனை பகுதிக்கு சென்றமையால் அங்கு பரபரப்பு நிலவியதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னார் பகுதியைச் சேர்ந்த  மூவர்  தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாக்ஜலசந்தி கடலை நீந்தி  செல்வதற்காக 12 பேர் அடங்கிய குழுவுடன் நேற்று மாலை 4 மணி அளவில் தலைமன்னாரிலிருந்து மூன்று பைபர் படகுகளில் புறப்பட்டுள்ளனர்.இவர்கள்  சரியாக இரவு  11  மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.இதையடுத்து, தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், இலங்கையில் இருந்து  அகதிகள் அல்லது சட்டவிரோதமாக இளைஞர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவிட்டார்கள் என்ற சந்தேகத்தில், மரைன் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு  கொடுத்த தகவலின் அடிப்படையில்,  தனுஷ்கோடி அரிச்சல்முனை  சென்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்த இலங்கை இளைஞர்களை  விசாரித்துள்ளனர்.அப்போது அவர்கள் இலங்கை - இந்திய அரசிடம் முழு அனுமதி பெற்று தனுஷ்கோடியில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்காக 3 பைப்பர் படகுகளில் தனுஷ்கோடி வந்தது தெரிய வந்துள்ளது.பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து மூன்று இளைஞர்களும் மன்னார் நோக்கி நீந்த தொடங்கியுடன், உடன் வந்த குழு நீந்தி செல்பவர்களுக்கு உதவிகளை செய்துள்ளனர் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement