• May 10 2024

ரணிலைக் கைவிடத் தயாராகும் மொட்டு அணி...! சாகர விளக்கம்..!samugammedia

Sharmi / May 8th 2023, 3:11 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டுக் கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன்தான் தற்போதைய அரசு செயற்படுகின்றது.

எமது கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டால்தான் எமது கட்சியால் தீர்மானமொன்று எடுக்கப்படும்.

எனினும், ஜனாதிபதி அவ்வாறு செயற்படவில்லை. அரசில் இருந்து வெளியேறுவதற்கான தேவையும் எமது கட்சிக்கு எழவில்லை." - என்றார்.

ரணிலைக் கைவிடத் தயாராகும் மொட்டு அணி. சாகர விளக்கம்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.மொட்டுக் கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன்தான் தற்போதைய அரசு செயற்படுகின்றது. எமது கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டால்தான் எமது கட்சியால் தீர்மானமொன்று எடுக்கப்படும். எனினும், ஜனாதிபதி அவ்வாறு செயற்படவில்லை. அரசில் இருந்து வெளியேறுவதற்கான தேவையும் எமது கட்சிக்கு எழவில்லை." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement