• Jan 12 2025

செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தேசிய கொள்கை; மக்களின் கருத்துக்களை பெற தீர்மானம்

Chithra / Jan 12th 2025, 7:55 am
image

 

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த தேசிய கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவானது, அவற்றை ஆராய்ந்து இறுதி வரைவினை தயாரிக்கவுள்ளது.

 இதற்கான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக மார்ச் மாதம் 14ஆம் திகதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகயை முன்னெடுப்பதன் ஊடாக, நுண்ணறிவு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதன் ஈடுபாடு மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி பயணிப்பதற்காக நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே நோக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தேசிய கொள்கை; மக்களின் கருத்துக்களை பெற தீர்மானம்  செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.இந்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த தேசிய கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவானது, அவற்றை ஆராய்ந்து இறுதி வரைவினை தயாரிக்கவுள்ளது. இதற்கான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக மார்ச் மாதம் 14ஆம் திகதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கைகயை முன்னெடுப்பதன் ஊடாக, நுண்ணறிவு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதன் ஈடுபாடு மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி பயணிப்பதற்காக நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே நோக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement