• May 05 2024

இலங்கைக்குரிய தொல்பொருட்களை திருப்பி அனுப்புகிறது நெதர்லாந்து! samugammedia

Chithra / Jul 7th 2023, 6:15 pm
image

Advertisement

இலங்கைக்குரிய 6 தொல்பொருட்கள் நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைந்த ஒரு கூட்டு சர்வதேச ஆதார ஆராய்ச்சியின் போது நெதர்லாந்தில் உள்ள Rijksmuseum சேகரிப்பில் இருந்த ஆறு தொல்பொருட்கள் இலங்கையை சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வாள், ஒரு தங்க கத்தி, இரண்டு துப்பாக்கிகள், மற்றும் பீரங்கிகள் எல்லாமே கண்டிய இராச்சியத்திற்கு சொந்தமானவை என அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவுள்ள தொல்பொருட்கள்  1765 ஆம் ஆண்டு கண்டி அரண்மனை முற்றுகையின் போது டச்சு கிழக்கிந்தியக் வர்த்தக கம்பனியால் பெறப்பட்ட டச்சு சொத்துக்கள்  என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கைக்குரிய தொல்பொருட்களை திருப்பி அனுப்புகிறது நெதர்லாந்து samugammedia இலங்கைக்குரிய 6 தொல்பொருட்கள் நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைந்த ஒரு கூட்டு சர்வதேச ஆதார ஆராய்ச்சியின் போது நெதர்லாந்தில் உள்ள Rijksmuseum சேகரிப்பில் இருந்த ஆறு தொல்பொருட்கள் இலங்கையை சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது.ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வாள், ஒரு தங்க கத்தி, இரண்டு துப்பாக்கிகள், மற்றும் பீரங்கிகள் எல்லாமே கண்டிய இராச்சியத்திற்கு சொந்தமானவை என அமைச்சு தெரிவித்துள்ளது.நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவுள்ள தொல்பொருட்கள்  1765 ஆம் ஆண்டு கண்டி அரண்மனை முற்றுகையின் போது டச்சு கிழக்கிந்தியக் வர்த்தக கம்பனியால் பெறப்பட்ட டச்சு சொத்துக்கள்  என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement