• Apr 22 2025

புத்தாண்டு நிகழ்வில் நிகழ்ந்த துயரம்; பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

Chithra / Apr 17th 2025, 1:40 pm
image


எல்பிட்டிய பகுதியில்  இன்று  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நிகழ்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது 40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து கீழே விழுந்த பாடசாலை மாணவன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பிட்டிகல  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 16 வயதுடைய மாணவன் அண்மையில் நடைபெற்று முடிந்த  க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர் ஆவார்.

பிரேத பரிசோதனை எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படுவதோடு, 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு நிகழ்வில் நிகழ்ந்த துயரம்; பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு எல்பிட்டிய பகுதியில்  இன்று  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.நிகழ்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது 40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து கீழே விழுந்த பாடசாலை மாணவன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பிட்டிகல  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த 16 வயதுடைய மாணவன் அண்மையில் நடைபெற்று முடிந்த  க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர் ஆவார்.பிரேத பரிசோதனை எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படுவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement