• May 06 2024

சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...! திருமலையில் கையெழுத்து போராட்டம்..!samugammedia

Sharmi / Aug 21st 2023, 4:51 pm
image

Advertisement

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து பதவி விளகக்கோரி திருகோணமலை -சேருவில பிரதேசத்தில் உள்ள சேருவில பிரதான வீதியில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.

நாடு தழுவிய ரீதியில் சுகாதார அமைச்சருக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் சேருவில பகுதியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

இதில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் ஆர்வத்தோடு கையெழுத்து இட்டதை காணமுடிந்தது.

நாட்டின் சுகாதார துறையானது தற்போது மோசமான நிலையில் காணப்படுகின்றது.அத்தியவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.மயக்க மருந்துகள் இல்லை. மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியோரும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதற்காக சுகாதார அமைச்சரை மாற்றுவதற்கு இவ் கையெழுத்து வேட்டை இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர்.



சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை. திருமலையில் கையெழுத்து போராட்டம்.samugammedia சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து பதவி விளகக்கோரி திருகோணமலை -சேருவில பிரதேசத்தில் உள்ள சேருவில பிரதான வீதியில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.நாடு தழுவிய ரீதியில் சுகாதார அமைச்சருக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் சேருவில பகுதியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.இதில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் ஆர்வத்தோடு கையெழுத்து இட்டதை காணமுடிந்தது.நாட்டின் சுகாதார துறையானது தற்போது மோசமான நிலையில் காணப்படுகின்றது.அத்தியவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.மயக்க மருந்துகள் இல்லை. மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியோரும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதற்காக சுகாதார அமைச்சரை மாற்றுவதற்கு இவ் கையெழுத்து வேட்டை இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement