• May 18 2024

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கு எழுந்த சந்தேகம் - திடீரென விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் samugammedia

Chithra / Apr 17th 2023, 8:27 pm
image

Advertisement

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தனக்கு உள்ள சந்தேகங்களை தீர்க்கும் முகமாக முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம், கோவில் வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்குமாகாண முன்னாள் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன், முன்னைய ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயலாளராக பதவிவகித்த வைத்தியர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டார். 

சுமார் 1.30 மணி நேரமாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பிலும் அதன் குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றது. 

மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைகளில் மாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சரும், மாகாண முதலமைச்சரும் மாத்திரமே பதவியில் இருக்கமுடியும், ஆளுநர் மாவட்ட அபிவிருத்தி சபைகளின் தலைவராக இருக்கமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டினேன் என்றார்.


13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கு எழுந்த சந்தேகம் - திடீரென விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் samugammedia வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தனக்கு உள்ள சந்தேகங்களை தீர்க்கும் முகமாக முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம், கோவில் வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது வடக்குமாகாண முன்னாள் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன், முன்னைய ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயலாளராக பதவிவகித்த வைத்தியர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டார். சுமார் 1.30 மணி நேரமாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பிலும் அதன் குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றது. மேலும் மாவட்ட அபிவிருத்தி சபைகளில் மாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சரும், மாகாண முதலமைச்சரும் மாத்திரமே பதவியில் இருக்கமுடியும், ஆளுநர் மாவட்ட அபிவிருத்தி சபைகளின் தலைவராக இருக்கமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டினேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement