• Sep 20 2024

வடமாகாண தேசத்தின் பெருமை - தேசிய விருது வழங்கும் விழா

Chithra / Jun 5th 2024, 7:30 pm
image

Advertisement


வடமாகாண தேசத்தின் பெருமை என்னும் தலைப்பில் தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஒன்று  இலங்கை ஜோதிட மாய கலாச்சார பௌத்த அடித்தள நிறுவனத்தினரால் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .

சமூக சேவையாளர்களையும் பல்துறை சார்ந்தவர்களினையும் கௌரவிக்கும் "தேசமானக்க" எனப்படும் தேசிய  விருதே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. 

அத்துடன் இந்த கௌரவ விருது வழங்கும் விழாவை நிர்வகிப்பதற்கு நான்கு மத குருமார்களைக் கொண்ட இயக்குனர்  குழு ஒன்றினை  அந்த அமைப்பு நியமித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ ஆனந்த சபரீச ஐயப்பன் தேவஸ்தான குரு அ.கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், 

தேசிய விருதினை பெற இருக்கின்ற அனை த்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள Diocese of UCFI நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை அமைப்பாளர் நடராஜா சுபாஷ் தெரிவிக்கையில்

இந்த தேசிய விருதினை வழங்குவதற்காக  கிராமிய, பிரதேச, சமூக மேம்பாட்டுகாகவும்  இலங்கை தாய் திருநாட்டின் உயர்ச்சிக்காகவும் இன , மத, வேறுபாடின்றி அர்ப்பணிப்போடு அளப்பரிய சேவையாற்றியஇலக்கிய சமூக சேவையாளர்களுக்கு இலங்கை தேசிய விருதினை பெறும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த கௌரவ நிகழ்வு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.


வடமாகாண தேசத்தின் பெருமை - தேசிய விருது வழங்கும் விழா வடமாகாண தேசத்தின் பெருமை என்னும் தலைப்பில் தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஒன்று  இலங்கை ஜோதிட மாய கலாச்சார பௌத்த அடித்தள நிறுவனத்தினரால் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .சமூக சேவையாளர்களையும் பல்துறை சார்ந்தவர்களினையும் கௌரவிக்கும் "தேசமானக்க" எனப்படும் தேசிய  விருதே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. அத்துடன் இந்த கௌரவ விருது வழங்கும் விழாவை நிர்வகிப்பதற்கு நான்கு மத குருமார்களைக் கொண்ட இயக்குனர்  குழு ஒன்றினை  அந்த அமைப்பு நியமித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ ஆனந்த சபரீச ஐயப்பன் தேவஸ்தான குரு அ.கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், தேசிய விருதினை பெற இருக்கின்ற அனை த்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுவதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள Diocese of UCFI நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளை அமைப்பாளர் நடராஜா சுபாஷ் தெரிவிக்கையில்இந்த தேசிய விருதினை வழங்குவதற்காக  கிராமிய, பிரதேச, சமூக மேம்பாட்டுகாகவும்  இலங்கை தாய் திருநாட்டின் உயர்ச்சிக்காகவும் இன , மத, வேறுபாடின்றி அர்ப்பணிப்போடு அளப்பரிய சேவையாற்றியஇலக்கிய சமூக சேவையாளர்களுக்கு இலங்கை தேசிய விருதினை பெறும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த கௌரவ நிகழ்வு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement