• May 18 2024

ஆயிரத்து 163 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு..! கஜேந்திரகுமாரின் சம்பவத்தை தொடர்ந்து வெளியான தகவல்.!samugammedia

Sharmi / Jun 7th 2023, 11:46 am
image

Advertisement

கடந்த மூன்று வருடங்களில் ஆயிரத்து 163 சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

கடந்த முப்பது வருடகால யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் துப்பாக்கிகள் நாடளரிய ரிதியில் பகிரப்பட்டுள்ளன.

அதன் பின்னர் அதிகளவான சட்டவிரோத துப்பாக்கிகள் தென் மாகாணத்தை சென்றடைந்துள்ளன.குறிப்பாக கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் போது சட்டவிரோத துப்பாக்கிகள் கொண்டு வரப்படுகின்றன.

உதாரணமாக, பண்டாரகம பொலிஸ் பிரிவில் 192 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட போது, அங்கு பத்து துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

கடந்த மூன்று வருடங்களில் ரி54 ரக மற்றும் ரி81 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றை அடக்குவதற்கு நாட்டில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

தென் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பொலிஸ் நிலையங்கள் அல்லது பொலிஸ் சோதனைச் சாவடிகளை நிறுவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தென் மாகாணத்தில் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

ஆயிரத்து 163 சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு. கஜேந்திரகுமாரின் சம்பவத்தை தொடர்ந்து வெளியான தகவல்.samugammedia கடந்த மூன்று வருடங்களில் ஆயிரத்து 163 சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.கடந்த முப்பது வருடகால யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் துப்பாக்கிகள் நாடளரிய ரிதியில் பகிரப்பட்டுள்ளன.அதன் பின்னர் அதிகளவான சட்டவிரோத துப்பாக்கிகள் தென் மாகாணத்தை சென்றடைந்துள்ளன.குறிப்பாக கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் போது சட்டவிரோத துப்பாக்கிகள் கொண்டு வரப்படுகின்றன.உதாரணமாக, பண்டாரகம பொலிஸ் பிரிவில் 192 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட போது, அங்கு பத்து துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. கடந்த மூன்று வருடங்களில் ரி54 ரக மற்றும் ரி81 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இவற்றை அடக்குவதற்கு நாட்டில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.தென் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பொலிஸ் நிலையங்கள் அல்லது பொலிஸ் சோதனைச் சாவடிகளை நிறுவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தென் மாகாணத்தில் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement