• Nov 25 2024

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க திட்டமிடும் எதிர்க்கட்சி..?

Chithra / Jun 30th 2024, 8:38 am
image

 

எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதம் நடத்தப்படும் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நிவாரணங்களை வழங்காத உடன்படிக்கை பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என நாடாளுமன்றில் அறிவித்து விட்டு,

அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.

எனினும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி விவாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலையியற் கட்டளையின் 16ஆம் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க திட்டமிடும் எதிர்க்கட்சி.  எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவாதம் நடத்தப்படும் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு நிவாரணங்களை வழங்காத உடன்படிக்கை பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என நாடாளுமன்றில் அறிவித்து விட்டு,அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த யோசனை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.எனினும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி விவாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நிலையியற் கட்டளையின் 16ஆம் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement