• May 05 2024

மூன்றரை நிமிடங்களில் பாஸ்தா தயாராகவில்லை - ரூ.40 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு!

Chithra / Dec 1st 2022, 2:30 pm
image

Advertisement

புளோரிடாவில் வசிக்கும் அமண்டா ரமிரெஸ் என்பவர், அமெரிக்க உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது புகார் அளித்துள்ளார். பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வருத்தமடைந்த அந்த பெண், கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது ரூ.40 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்துவிடும் என்று விளம்பரம் செய்ததாகவும், ஆனால் அதை வாங்கி பயன்படுத்தும் போது அதிகம் நேரமானதாகவும் தனது மனுவில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். 

இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக கூறி அந்நிறுவனம் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்றரை நிமிடங்களில் மைக்ரோவேவில் தயார் செய்துவிடலாம் என்று அந்த நிறுவனம் கூறுவது தவறு. 

இந்த நேரத்தில் உணவு சமைக்க முடியாது. பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என்று அந்த பெண் புகார் கூறுகிறார்.

பாஸ்தாவை சமைக்க தேவைப்படும் சரியான நேரம் குறித்த விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் தயாரிப்புகளை வாங்கியிருக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஆனால் கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்த புகார் மிகவும் அற்பமானது என்றும் இதற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மூன்றரை நிமிடங்களில் பாஸ்தா தயாராகவில்லை - ரூ.40 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு புளோரிடாவில் வசிக்கும் அமண்டா ரமிரெஸ் என்பவர், அமெரிக்க உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது புகார் அளித்துள்ளார். பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வருத்தமடைந்த அந்த பெண், கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது ரூ.40 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்துவிடும் என்று விளம்பரம் செய்ததாகவும், ஆனால் அதை வாங்கி பயன்படுத்தும் போது அதிகம் நேரமானதாகவும் தனது மனுவில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக கூறி அந்நிறுவனம் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்றரை நிமிடங்களில் மைக்ரோவேவில் தயார் செய்துவிடலாம் என்று அந்த நிறுவனம் கூறுவது தவறு. இந்த நேரத்தில் உணவு சமைக்க முடியாது. பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என்று அந்த பெண் புகார் கூறுகிறார்.பாஸ்தாவை சமைக்க தேவைப்படும் சரியான நேரம் குறித்த விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் தயாரிப்புகளை வாங்கியிருக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்த புகார் மிகவும் அற்பமானது என்றும் இதற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement