• May 05 2024

இலங்கை வைத்தியசாலைகளில் உணவின்றி தவிக்கும் நோயாளிகள்! - அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Mar 16th 2023, 1:27 pm
image

Advertisement

வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு அடிப்படை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கு கூட நேற்று (15) வைத்தியசாலையினால் உணவுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் உள்நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுமார் இருநூற்றி எண்பத்தி ஒன்பது நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் சுமார் நூற்றி ஐம்பது நோயாளர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்படும் உணவைப் பெற்று வருகின்றனர்.

நேற்றைய வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் சமையற்காரர்கள் மற்றும் சமையல் ஊழியர்கள் இந்த நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை.

இதன் காரணமாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன மற்றும் அதிகாரிகள் உள்நோயாளிகளுக்கு வெளியில் இருந்து உணவுகளை கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன், தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் உள்நோயாளிகளுக்கு நேற்றைய தினம் சமயலறை ஊழியர்களினால் உணவு வழங்கப்படவில்லை எனவும் அவர்களும் வெளியில் இருந்து உணவு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார் .

இந்த மருத்துவமனையில் சுமார் ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை வைத்தியசாலைகளில் உணவின்றி தவிக்கும் நோயாளிகள் - அதிர்ச்சித் தகவல் SamugamMedia வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு அடிப்படை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கு கூட நேற்று (15) வைத்தியசாலையினால் உணவுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனால் உள்நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுமார் இருநூற்றி எண்பத்தி ஒன்பது நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் சுமார் நூற்றி ஐம்பது நோயாளர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்படும் உணவைப் பெற்று வருகின்றனர்.நேற்றைய வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் சமையற்காரர்கள் மற்றும் சமையல் ஊழியர்கள் இந்த நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை.இதன் காரணமாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன மற்றும் அதிகாரிகள் உள்நோயாளிகளுக்கு வெளியில் இருந்து உணவுகளை கொண்டு வந்துள்ளனர்.அத்துடன், தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் உள்நோயாளிகளுக்கு நேற்றைய தினம் சமயலறை ஊழியர்களினால் உணவு வழங்கப்படவில்லை எனவும் அவர்களும் வெளியில் இருந்து உணவு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார் .இந்த மருத்துவமனையில் சுமார் ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement