• May 18 2024

அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ள மக்கள்! - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் SamugamMedia

Chithra / Feb 28th 2023, 11:26 am
image

Advertisement

சில அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தவறுகளினால் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். 

சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசியல்வாதிகளை அவப் பெயர் கேட்கும்  நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவப் பிரிவுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் ISO 9001: 2015 தரச் சான்றிதழை வழங்குவதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்றது.

அரச நிறுவனங்களை மக்களின் நட்புறவாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தரமான விருதுகளை வென்றதன் பின்னர் உரிய தரத்தை பேணுவதற்கு நிறுவனத்திலுள்ள அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

விருதுகளை வெல்வதுடன், விருதுகளை வெல்வதற்கான சூழ்நிலையை பாதுகாப்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அது இலகுவான காரியம் அல்ல என்றும் கூறினார்.

ISO 9001 : 2015 தரச் சான்றிதழைப் பெறுவதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனிதவளப் பிரிவு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அது தொடர்பான கணக்காய்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.

அதன்படி, அதற்கான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஜனவரி 23ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நியமத்தை முழு நிறுவனத்திற்கும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், பிரதான அலுவலகத்திற்கு வெளியே உள்ள அலுவலகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதிகாரசபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சமந்தி நாரங்கொட, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மனித வள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம்) டபிள்யூ.ஏ.எஸ். சுமனசூரிய, பணிப்பாளர் (நிர்வாகம்) தேவிகா கெகுலந்தர, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஸ்ரீராணி ரோஸ் மார்டிங் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ள மக்கள் - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் SamugamMedia சில அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தவறுகளினால் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசியல்வாதிகளை அவப் பெயர் கேட்கும்  நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவப் பிரிவுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் ISO 9001: 2015 தரச் சான்றிதழை வழங்குவதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்றது.அரச நிறுவனங்களை மக்களின் நட்புறவாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தரமான விருதுகளை வென்றதன் பின்னர் உரிய தரத்தை பேணுவதற்கு நிறுவனத்திலுள்ள அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். விருதுகளை வெல்வதுடன், விருதுகளை வெல்வதற்கான சூழ்நிலையை பாதுகாப்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அது இலகுவான காரியம் அல்ல என்றும் கூறினார்.ISO 9001 : 2015 தரச் சான்றிதழைப் பெறுவதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனிதவளப் பிரிவு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அது தொடர்பான கணக்காய்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.அதன்படி, அதற்கான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஜனவரி 23ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நியமத்தை முழு நிறுவனத்திற்கும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், பிரதான அலுவலகத்திற்கு வெளியே உள்ள அலுவலகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதிகாரசபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.இந்நிகழ்வில், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சமந்தி நாரங்கொட, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மனித வள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம்) டபிள்யூ.ஏ.எஸ். சுமனசூரிய, பணிப்பாளர் (நிர்வாகம்) தேவிகா கெகுலந்தர, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஸ்ரீராணி ரோஸ் மார்டிங் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement