• May 18 2024

அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டம்...!samugammedia

Anaath / Oct 31st 2023, 3:42 pm
image

Advertisement

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு  நிதியமைச்சு திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர்   இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள் நிவாரணப் பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டம்.samugammedia அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு  நிதியமைச்சு திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர்   இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள் நிவாரணப் பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement