• May 05 2024

துறைசார் நிபுணர்களின் வெளியேற்றம், இந்த நாட்டின் அழிவுக்கான ஆரம்பமே...! சிறீதரன் எம்.பி samugammedia

Sharmi / Oct 31st 2023, 3:40 pm
image

Advertisement

அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பறைசாற்றி நிற்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற 0yslans நிறுவனத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டுள்ள போதும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கோலோச்சி வரும் oyslans நிறுவனம் ஏராளமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு எனும் வரப்பிரசாதத்தை வழங்கிவரும் நிறுவனமாகவும் முன்னிலை வகிக்கிறது.

இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகளை எமது பிள்ளைகள் முறையாகப் பயன்படுத்தி, தமது துறைசார் அறிவையும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

துறைசார் நிபுணர்களின் வெளியேற்றம், இந்த நாட்டின் அழிவுக்கான ஆரம்பமே. சிறீதரன் எம்.பி samugammedia அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பறைசாற்றி நிற்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 0yslans நிறுவனத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டுள்ள போதும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கோலோச்சி வரும் oyslans நிறுவனம் ஏராளமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு எனும் வரப்பிரசாதத்தை வழங்கிவரும் நிறுவனமாகவும் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகளை எமது பிள்ளைகள் முறையாகப் பயன்படுத்தி, தமது துறைசார் அறிவையும் வல்லமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement