• May 11 2024

கட்டாருக்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை samugammedia

Chithra / Aug 23rd 2023, 8:40 am
image

Advertisement

கட்டாருக்கு வேலைக்கு சென்று தொழில் கிடைக்காமல் திரும்பி வந்த இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்புக் கடிதம், வேலை ஒப்பந்தம் இல்லாமல், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, கட்டாருக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு வேலை கிடைக்காமல், இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிய நிலையில், சொந்த செலவில் நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு இந்த இரண்டு கடிதங்களில் ஒன்றை வைத்திருப்பது அவசியமாகும்.

இவர்கள் இருவரும் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இரு இளைஞர்களாவர்.

கட்டாரில் உள்ள இலங்கை வேலை வழங்கும் தரகர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலா 05 இலட்சம் கொடுத்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி அங்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

05 வருடங்கள் நாட்டில் தங்கி வேலை செய்வதற்குத் தேவையான விசாக்கள் தங்களிடம் இருப்பதாக தரகர் கூறியிருந்தார். ஆனால் கட்டாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில், அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் இருவருக்கும் 90 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு தேவையான சுற்றுலா விசாக்களை வழங்கியுள்ளனர்.

குறித்த இரண்டு இளைஞர்களும் கத்தாரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து வேலை கிடைக்காமல், நேற்று சொந்த செலவில் இலங்கை திரும்பியுள்ளனர்.

மேலும் 11 இலங்கை இளைஞர்கள் வேலையின்றி இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இந்த இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியில் இருப்பதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், வர்த்தக மற்றும் சட்டவிரோத குடிவரவு பிரிவின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டாருக்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை samugammedia கட்டாருக்கு வேலைக்கு சென்று தொழில் கிடைக்காமல் திரும்பி வந்த இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.வேலை வாய்ப்புக் கடிதம், வேலை ஒப்பந்தம் இல்லாமல், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, கட்டாருக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.அங்கு வேலை கிடைக்காமல், இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிய நிலையில், சொந்த செலவில் நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்டது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு இந்த இரண்டு கடிதங்களில் ஒன்றை வைத்திருப்பது அவசியமாகும்.இவர்கள் இருவரும் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இரு இளைஞர்களாவர்.கட்டாரில் உள்ள இலங்கை வேலை வழங்கும் தரகர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலா 05 இலட்சம் கொடுத்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி அங்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.05 வருடங்கள் நாட்டில் தங்கி வேலை செய்வதற்குத் தேவையான விசாக்கள் தங்களிடம் இருப்பதாக தரகர் கூறியிருந்தார். ஆனால் கட்டாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில், அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் இருவருக்கும் 90 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு தேவையான சுற்றுலா விசாக்களை வழங்கியுள்ளனர்.குறித்த இரண்டு இளைஞர்களும் கத்தாரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து வேலை கிடைக்காமல், நேற்று சொந்த செலவில் இலங்கை திரும்பியுள்ளனர்.மேலும் 11 இலங்கை இளைஞர்கள் வேலையின்றி இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இந்த இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியில் இருப்பதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், வர்த்தக மற்றும் சட்டவிரோத குடிவரவு பிரிவின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement