• May 06 2024

வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் கைது! SamugamMedia

Tamil nila / Mar 4th 2023, 11:09 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை  ஜன சவி மாவத்தை பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் இன்று மாலை  (04)  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்துள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர். 
சந்தேக நபர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

அப்பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டுவதாக  கந்தளாய் புலனாய்வு பிரிவு  பொலிசாருக்கு  கிடைத்த தகவலையடுத்து  பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது  வீட்டின் அடிப்பாகத்தில்  பதினைந்து அடி வரை தொண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது  செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு ஒரு மண்வெட்டி  ஒரு சுத்தியல் ஒரு பிளாஸ்டிக் வாளி,கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம்  மற்றும் மல்டி வயரும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை  தடுத்து வைத்து விசாரணைகளை   மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .

வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் கைது SamugamMedia திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை  ஜன சவி மாவத்தை பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் இன்று மாலை  (04)  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்துள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டுவதாக  கந்தளாய் புலனாய்வு பிரிவு  பொலிசாருக்கு  கிடைத்த தகவலையடுத்து  பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது  வீட்டின் அடிப்பாகத்தில்  பதினைந்து அடி வரை தொண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது  செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு ஒரு மண்வெட்டி  ஒரு சுத்தியல் ஒரு பிளாஸ்டிக் வாளி,கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம்  மற்றும் மல்டி வயரும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபர்களை  தடுத்து வைத்து விசாரணைகளை   மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement