• May 05 2024

ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்த அச்சப்படும் ஜனாதிபதி..! samugammedia

Chithra / May 28th 2023, 9:59 am
image

Advertisement

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தாமை தொடர்பில் விமான சேவை துறையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஜனாதிபதி இதற்கு முன்னர் பல வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியதில்லை என்பது விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிங்கப்பூர் எயார் லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜப்பான் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நேரடி விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் எயார்லைன்ஸ் விமானத்தில் நரிட்டா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் திரும்பி உள்ளார்.

அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்புவார் என கூறப்படுகின்றது.

அதற்கமைய, ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் எதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் நம்பகத்தன்மையில் உள்ள பிரச்சினை காரணமாக அந்த விமானங்களை பயன்படுத்தப்படவில்லையா அல்லது வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்தவில்லையா என்பது தொடர்பில் தகவல் அறிய பலதரப்பட்ட மக்கள் ஆர்வமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்த அச்சப்படும் ஜனாதிபதி. samugammedia ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தாமை தொடர்பில் விமான சேவை துறையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.ஜனாதிபதி இதற்கு முன்னர் பல வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியதில்லை என்பது விசேட அம்சமாகும்.ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.இரண்டு சந்தர்ப்பங்களிலும் சிங்கப்பூர் எயார் லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜப்பான் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தையும் ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்.ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நேரடி விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் எயார்லைன்ஸ் விமானத்தில் நரிட்டா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் திரும்பி உள்ளார்.அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்புவார் என கூறப்படுகின்றது.அதற்கமைய, ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் எதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவில்லை என தெரியவந்துள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் நம்பகத்தன்மையில் உள்ள பிரச்சினை காரணமாக அந்த விமானங்களை பயன்படுத்தப்படவில்லையா அல்லது வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்தவில்லையா என்பது தொடர்பில் தகவல் அறிய பலதரப்பட்ட மக்கள் ஆர்வமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement