• May 05 2024

சர்வதேச நாணய நிதியத்தின் 2ம் கட்ட நிதியை இலங்கைக்கு வழங்குவதில் சிக்கல்? samugammedia

Sharmi / Sep 27th 2023, 11:10 pm
image

Advertisement

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதுடன்  இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும்,இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் எனவும் கூறினார்.

மேலும், குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் இணங்கிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2ம் கட்ட நிதியை இலங்கைக்கு வழங்குவதில் சிக்கல் samugammedia நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதுடன்  இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.ஊடகவியலாளர் சந்திப்பில் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும்,இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் எனவும் கூறினார்.மேலும், குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் இணங்கிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.எனினும் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement