• May 18 2024

ராஜபக்சர்களின் குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது- குற்றம் சுமத்திய சந்திரிக்கா!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 9:55 am
image

Advertisement

நாட்டின் மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்சர்கள் கௌரவமாக அரசியலில் ஒதுங்கவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

மதுகம நகரில் இடம்பெற்ற பிரச்சார நிகழ்வின் பின்னர் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.ராஜபக்ச குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.

ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும், அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அவதானம் செலுத்தவில்லை, அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போரடினேன். ஒரு யுத்தத்தை புரிந்துக் கொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன். பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது, டொலரும் இருந்தது.

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்சர்களின் குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது- குற்றம் சுமத்திய சந்திரிக்காSamugamMedia நாட்டின் மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்சர்கள் கௌரவமாக அரசியலில் ஒதுங்கவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.மதுகம நகரில் இடம்பெற்ற பிரச்சார நிகழ்வின் பின்னர் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.ராஜபக்ச குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும், அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அவதானம் செலுத்தவில்லை, அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போரடினேன். ஒரு யுத்தத்தை புரிந்துக் கொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன். பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது, டொலரும் இருந்தது.நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement