• May 18 2024

இலங்கை தமிழர்கள் நாடு செல்ல விரும்பினால் அனுப்பத் தயார்: தமிழக அமைச்சர்!

Tamil nila / Dec 10th 2022, 10:12 pm
image

Advertisement

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்க குடியுரிமை வேண்டும் என்று தான் விரும்புகின்றனர் என தமிழக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்கில் காசா தொண்டு நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு ஜூப்ளிக் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அவர்களின் நாட்டிற்கு செல்ல இது வரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், இலங்கைக்குச் செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க தமிழக அரசு தயார் ஆனால் மத்திய அரசு அனுமதி இன்னும் தரவில்லை என்றும், இது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்க குடியுரிமை வேண்டும் என்று தான் விரும்புகின்றனர் என்று கூறிய அமைச்சர் மஸ்தான், சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவி தொகை நிறுத்தி வைத்தது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்றார். தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகள் தொடர்ந்து கல்வி பெறுவதற்கு அந்தத் தொகை நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்துவதகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார்.


சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். 


இலங்கை தமிழர்களை பாதுகாக்க 317 கோடி ரூபாயில் 106 முகாம்களின் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுகின்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளார்கள் இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற து என்று அவர் கூறினார்.


இலங்கை தமிழர்கள் நாடு செல்ல விரும்பினால் அனுப்பத் தயார்: தமிழக அமைச்சர் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்க குடியுரிமை வேண்டும் என்று தான் விரும்புகின்றனர் என தமிழக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்கில் காசா தொண்டு நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு ஜூப்ளிக் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அவர்களின் நாட்டிற்கு செல்ல இது வரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், இலங்கைக்குச் செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க தமிழக அரசு தயார் ஆனால் மத்திய அரசு அனுமதி இன்னும் தரவில்லை என்றும், இது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்க குடியுரிமை வேண்டும் என்று தான் விரும்புகின்றனர் என்று கூறிய அமைச்சர் மஸ்தான், சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவி தொகை நிறுத்தி வைத்தது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்றார். தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகள் தொடர்ந்து கல்வி பெறுவதற்கு அந்தத் தொகை நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்துவதகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார்.சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இலங்கை தமிழர்களை பாதுகாக்க 317 கோடி ரூபாயில் 106 முகாம்களின் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுகின்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளார்கள் இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற து என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement