• May 05 2024

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைப்பு? வெளியான அறிவிப்பு

Chithra / Feb 2nd 2023, 7:22 am
image

Advertisement

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


உணவுப் பாதுகாப்புக்குழு தலையிட்டு உடனடியாக விலையைக் கட்டுப்படுத்துவதற்கான சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

உதாரணமாக, கொத்து ரொட்டியின் விலை 700 ரூபாய்க்கு மேல் இருப்பதால் கடைக்காரர்களுக்கு வரம்பற்ற இலாபம் கிடைக்கப்பெறுகின்றது.


எனவே குறைந்தபட்சம் ஒரு கொத்து ரொட்டி பொதியின் விலை 450-500 ரூபாய்க்குள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ரோல், பஜ்ஜி, மீன் கேக் மற்றும் பிற பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெங்காயம், உருளைக்கிழங்கு, சீனி மற்றும் கோதுமை மாவின் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், உணவு பொருட்களின் விலை குறைக்கப்படாத நிலையில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே தொடர்புடைய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைப்பு வெளியான அறிவிப்பு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவுப் பாதுகாப்புக்குழு தலையிட்டு உடனடியாக விலையைக் கட்டுப்படுத்துவதற்கான சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.உதாரணமாக, கொத்து ரொட்டியின் விலை 700 ரூபாய்க்கு மேல் இருப்பதால் கடைக்காரர்களுக்கு வரம்பற்ற இலாபம் கிடைக்கப்பெறுகின்றது.எனவே குறைந்தபட்சம் ஒரு கொத்து ரொட்டி பொதியின் விலை 450-500 ரூபாய்க்குள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ரோல், பஜ்ஜி, மீன் கேக் மற்றும் பிற பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெங்காயம், உருளைக்கிழங்கு, சீனி மற்றும் கோதுமை மாவின் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், உணவு பொருட்களின் விலை குறைக்கப்படாத நிலையில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே தொடர்புடைய பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement