• May 05 2024

வர்த்தக கூடாரத்தை ரிப்பன் வெட்டி திறக்க 10 இலட்சம் ரூபாய் செலவு..! வெளியான கணக்காய்வு அறிக்கையால் அதிர்ச்சி samugammedia

Chithra / Sep 13th 2023, 11:57 am
image

Advertisement

சவூதி அரேபியாவில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் வர்த்தக கூடாரத்தை திறப்பதற்கு பத்து இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ரிப்பன்கள், கத்தரிக்கோல், மெழுகுவர்த்திகள் மற்றும் தட்டு வாங்குவதற்கு மாத்திரம் இந்த தொகையை  இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் செலவிட்டுள்ளது.

அறிக்கையின்படி, இந்த வர்த்தக கண்காட்சி 2022  மே 09 முதல் 12 வரை நடைபெற்றது. 

மேலும் 2021 டிசெம்பரில் அதன் செலவீனங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்டது. 

ஆனால் 2022 மார்ச் 29 அன்று 12கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டது.

இத்தொகை முதலில் 250 சதுர மீட்டர் இடத்துக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக 150 சதுர மீட்டராகக் குறைக்கப்பட்டது.

இடம் குறைக்கப்பட்ட போதிலும், அடிப்படைச் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக, கூடுதலாக 5,823,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக கூடாரத்தை ரிப்பன் வெட்டி திறக்க 10 இலட்சம் ரூபாய் செலவு. வெளியான கணக்காய்வு அறிக்கையால் அதிர்ச்சி samugammedia சவூதி அரேபியாவில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் வர்த்தக கூடாரத்தை திறப்பதற்கு பத்து இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.ரிப்பன்கள், கத்தரிக்கோல், மெழுகுவர்த்திகள் மற்றும் தட்டு வாங்குவதற்கு மாத்திரம் இந்த தொகையை  இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் செலவிட்டுள்ளது.அறிக்கையின்படி, இந்த வர்த்தக கண்காட்சி 2022  மே 09 முதல் 12 வரை நடைபெற்றது. மேலும் 2021 டிசெம்பரில் அதன் செலவீனங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் 2022 மார்ச் 29 அன்று 12கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டது.இத்தொகை முதலில் 250 சதுர மீட்டர் இடத்துக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக 150 சதுர மீட்டராகக் குறைக்கப்பட்டது.இடம் குறைக்கப்பட்ட போதிலும், அடிப்படைச் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக, கூடுதலாக 5,823,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement