• Nov 26 2024

மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதி!

Tamil nila / Nov 23rd 2024, 10:01 pm
image

எமது மண்ணையும், மக்களையும் ஆழ நேசித்து, இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காக தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை,  காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மாவீரர் வாரத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருத்திரபுரம் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.  அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது;

இனத்தின் வரலாற்றை, தம் இருப்பை நிலைநாட்டுவதற்காக எமது இனத்தின் புதல்வர்கள் புரிந்திருக்கும் ஆகப்பெரும் தியாகத்தை,  இந்தத் தலைமுறை உணரத்தலைப்பட்டால் மட்டுமே, ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றியிருக்கும் இலங்கை நாட்டில், ஈழத்தமிழர்களின் இருப்பு உறுதிபடும் என்பதை உணர்ந்தவர்களாக, மாவீரர் மாண்பையும், அவர்களது பற்றுறுதிமிக்க தமிழ்த்தேசியக் கொள்கையையும், ஈழவிடுதலைப் போரின் நியாயாதிக்கங்களையும் உணர்ந்த சமூகமாக எங்களின் இளையோரை புடம்போடுவதே மாவீரர்களுக்கும், அவர்களை மடியீந்த பெற்றோருக்கும் நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.

தங்கள் பிள்ளைகளை, இந்தத் தேசத்துக்காக தாரைவார்த்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு, தமிழ்த் தேசிய உணர்வு சிதையாவண்ணம் எங்கள் சந்ததியைச் செதுக்குவோம் என்ற உறுதியை வழங்குவதொன்றே நிறைவைத் தரும் - என்றார்.


மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதி எமது மண்ணையும், மக்களையும் ஆழ நேசித்து, இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காக தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான விலையை,  காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசிய மாவீரர் வாரத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருத்திரபுரம் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.  அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது;இனத்தின் வரலாற்றை, தம் இருப்பை நிலைநாட்டுவதற்காக எமது இனத்தின் புதல்வர்கள் புரிந்திருக்கும் ஆகப்பெரும் தியாகத்தை,  இந்தத் தலைமுறை உணரத்தலைப்பட்டால் மட்டுமே, ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றியிருக்கும் இலங்கை நாட்டில், ஈழத்தமிழர்களின் இருப்பு உறுதிபடும் என்பதை உணர்ந்தவர்களாக, மாவீரர் மாண்பையும், அவர்களது பற்றுறுதிமிக்க தமிழ்த்தேசியக் கொள்கையையும், ஈழவிடுதலைப் போரின் நியாயாதிக்கங்களையும் உணர்ந்த சமூகமாக எங்களின் இளையோரை புடம்போடுவதே மாவீரர்களுக்கும், அவர்களை மடியீந்த பெற்றோருக்கும் நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.தங்கள் பிள்ளைகளை, இந்தத் தேசத்துக்காக தாரைவார்த்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு, தமிழ்த் தேசிய உணர்வு சிதையாவண்ணம் எங்கள் சந்ததியைச் செதுக்குவோம் என்ற உறுதியை வழங்குவதொன்றே நிறைவைத் தரும் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement