• Nov 26 2024

நிலவில் பாரிய குகை கண்டுபிடிப்பு- விஞ்ஞானிகள் குழு வெற்றி!

Tamil nila / Jul 17th 2024, 9:58 pm
image

முதன் முறையாக, நிலவில் நிரந்தர குடியேற்றம் அமைக்கக்கூடிய குகையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.

நிலவில் உள்ள Mare Tranquillatis என்ற பாறை சமவெளியில் ரேடார் ஆய்வு மேற்கொண்ட போது இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புருசோன் மற்றும் லியோனார்டோ கேரர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

குகை குறைந்தபட்சம் 100 மீட்டர் ஆழத்தில் இருப்பதாகவும், மனிதர்கள் நிரந்தர குடியேற்றத்தை உருவாக்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குகை கட்டப்பட்டுள்ள “மாரே” எனப்படும் பாறை சமவெளியை தரையில் இருந்து பார்க்க முடியும், அப்பல்லோ 11 1969 இல் அந்த நிலத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் பாரிய குகை கண்டுபிடிப்பு- விஞ்ஞானிகள் குழு வெற்றி முதன் முறையாக, நிலவில் நிரந்தர குடியேற்றம் அமைக்கக்கூடிய குகையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.நிலவில் உள்ள Mare Tranquillatis என்ற பாறை சமவெளியில் ரேடார் ஆய்வு மேற்கொண்ட போது இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புருசோன் மற்றும் லியோனார்டோ கேரர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.குகை குறைந்தபட்சம் 100 மீட்டர் ஆழத்தில் இருப்பதாகவும், மனிதர்கள் நிரந்தர குடியேற்றத்தை உருவாக்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.குகை கட்டப்பட்டுள்ள “மாரே” எனப்படும் பாறை சமவெளியை தரையில் இருந்து பார்க்க முடியும், அப்பல்லோ 11 1969 இல் அந்த நிலத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement