• Nov 24 2025

கடுமையான மூடுபனி - வாகன சாரதிகளுக்கு வந்த அவசர எச்சரிக்கை

Chithra / Nov 18th 2025, 9:00 am
image


ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் தமது வாகனங்களின் முன்விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) முறையாக ஒளிரச் செய்து, கவனமாகவும் மிகக் குறைந்த வேகத்திலும் பயணிக்க வேண்டும் என பொலிஸார் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.

விபத்துகளைக் குறைப்பதற்கு சாரதிகளின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என பொலிஸார் மேலும் வலியுறுத்துகின்றனர்.

எனவே, வாகனச் சாரதிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடுமையான மூடுபனி - வாகன சாரதிகளுக்கு வந்த அவசர எச்சரிக்கை ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் தமது வாகனங்களின் முன்விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) முறையாக ஒளிரச் செய்து, கவனமாகவும் மிகக் குறைந்த வேகத்திலும் பயணிக்க வேண்டும் என பொலிஸார் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.விபத்துகளைக் குறைப்பதற்கு சாரதிகளின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என பொலிஸார் மேலும் வலியுறுத்துகின்றனர்.எனவே, வாகனச் சாரதிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement