• May 04 2024

அரச வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு..! சிக்கலில் நோயாளர்கள்..! samugammedia

Chithra / Jun 22nd 2023, 12:48 pm
image

Advertisement

நாட்டின் பிரதான அரசாங்க வைத்தியசாலையான காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலையால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 556 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 460 வைத்தியர்கள் உள்ளதாகவும், இந்த வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் யு.எம். ரங்கவிடம் வினவியபோது;

தற்போது சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு போதிய வைத்தியர்களை வழங்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கோரிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை அமைச்சகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அரச வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு. சிக்கலில் நோயாளர்கள். samugammedia நாட்டின் பிரதான அரசாங்க வைத்தியசாலையான காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்நிலையால் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பராமரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 556 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 460 வைத்தியர்கள் உள்ளதாகவும், இந்த வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் யு.எம். ரங்கவிடம் வினவியபோது;தற்போது சுமார் 100 வைத்தியர்கள் தட்டுப்பாடு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு போதிய வைத்தியர்களை வழங்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கோரிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை அமைச்சகம் இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement