• May 04 2024

வடக்கில் சீனிக்கு தட்டுப்பாடு..! அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Nov 30th 2023, 4:58 pm
image

Advertisement

 


வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, துறைசார் அமைச்சருடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில், மேலதிகமாக 100 மெற்றிக்தொன் சீனியை அனுப்புதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சீனியை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவும் நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சீனிக்கு தட்டுப்பாடு. அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை samugammedia  வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.இதுதொடர்பாக, துறைசார் அமைச்சருடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில், மேலதிகமாக 100 மெற்றிக்தொன் சீனியை அனுப்புதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சீனியை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவும் நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement