• Nov 06 2024

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

Chithra / Sep 19th 2024, 8:00 am
image

Advertisement


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சதெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 'வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ' நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதேவேளை, தேர்தலன்று வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. 

இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சதெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 'வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ' நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.இதேவேளை, தேர்தலன்று வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement