• Nov 22 2024

தேர்தல்களை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கைகள் - மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி தனிப்பட்ட சந்திப்பு..!

Chithra / Feb 2nd 2024, 8:59 am
image

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல்களை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கைகள் - மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி தனிப்பட்ட சந்திப்பு. எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement