• Nov 17 2024

கியூபத் தூதுவர் - அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு..!!

Tamil nila / Mar 8th 2024, 5:51 pm
image

இன்றைய தினம் (08) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.


இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர்  Mrs. Maribel Duarte Gonzalez தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.


நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.

கியூபத் தூதுவர் - அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு. இன்றைய தினம் (08) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர்  Mrs. Maribel Duarte Gonzalez தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர்.இதன் போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement