• May 18 2024

சனத்தொகையில் முதலிடம் வந்துள்ள இந்தியாவுக்கு இலங்கை உதவவேண்டும் - எஸ்.பி.! samugammedia

Chithra / Apr 22nd 2023, 10:34 am
image

Advertisement

உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்றும் எனவே, இந்திய மாணவர்கள், இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியது இலங்கையின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் அதிக நிலப்பரப்பு உள்ளது. இந்தியாவில் அதைவிடவும் குறைவு. ஆனால் உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. 

குறிப்பாக மும்பையில் மாத்திரம் 22 மில்லியன் பேர் வாழ்கின்றனர். இது இலங்கையின் முழு சனத்தொகை அளவாகும். 

செல்வந்தர்கள், பிரபலமான கலைஞர்கள் உள்ளிட்டோர் மும்பையில்தான் வாழ்கின்றனர். அங்கு சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளி மாசடைந்துள்ளது. இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய மாணவர்கள் இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதும், சுதந்திரமாக சுற்றுலா வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதும் இலங்கையின் பொறுப்பாகும். 

ஏனெனில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தியாவே இலங்கைக்கு உதவியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சனத்தொகையில் முதலிடம் வந்துள்ள இந்தியாவுக்கு இலங்கை உதவவேண்டும் - எஸ்.பி. samugammedia உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்றும் எனவே, இந்திய மாணவர்கள், இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியது இலங்கையின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சீனாவில் அதிக நிலப்பரப்பு உள்ளது. இந்தியாவில் அதைவிடவும் குறைவு. ஆனால் உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக மும்பையில் மாத்திரம் 22 மில்லியன் பேர் வாழ்கின்றனர். இது இலங்கையின் முழு சனத்தொகை அளவாகும். செல்வந்தர்கள், பிரபலமான கலைஞர்கள் உள்ளிட்டோர் மும்பையில்தான் வாழ்கின்றனர். அங்கு சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளி மாசடைந்துள்ளது. இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, இந்திய மாணவர்கள் இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதும், சுதந்திரமாக சுற்றுலா வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதும் இலங்கையின் பொறுப்பாகும். ஏனெனில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தியாவே இலங்கைக்கு உதவியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement