• May 05 2024

புத்தாண்டில் இருளில் மூழ்கவுள்ள இலங்கை..! நாடு இயங்க முடியாத நிலை ஏற்படும் அபாயம்!

Chithra / Dec 20th 2022, 2:01 pm
image

Advertisement

நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் 31ஆம் திகதி தீர்ந்ததையடுத்து, நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும், அதன் பின்னர் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு இருக்கும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார் .

நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகிறது. 

இங்கு மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும். 

அதேவேளை நீர்மின் நிலையங்களில் நீர்மட்டம் 75 வீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர் மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .

புத்தாண்டில் இருளில் மூழ்கவுள்ள இலங்கை. நாடு இயங்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் 31ஆம் திகதி தீர்ந்ததையடுத்து, நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும், அதன் பின்னர் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு இருக்கும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார் .நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகிறது. இங்கு மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும். அதேவேளை நீர்மின் நிலையங்களில் நீர்மட்டம் 75 வீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர் மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement