• May 05 2024

அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் பெருந்தொகை டொலர்கள்! SamugamMedia

Chithra / Mar 9th 2023, 6:39 am
image

Advertisement

அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கை 4.5 பில்லியன் டொலர்களை திரட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா டெலிகொம் (SriLanka Telecom), லிட்ரோ கேஸ் (Litro Gas), ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering), எயார்போர்ட் கிரவுண்ட் ஹேண்ட்லிங் (Airport Ground Handling), ஹில்டன் ஹோட்டல் (Hilton Hotel) உள்ளிட்டவை அடங்குவதாக இரண்டு அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலாபம் ஈட்டும் மற்றும் நட்டமடையும் 14 அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 4.5 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் மீது இந்திய தனியார் நிறுவனமொன்று தீவிர ஆர்வம் காட்டி வருவதுடன், கட்டாரும் சில சொத்துக்கள் மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே பொதுச்சொத்துகளின் பங்கீடு என்றும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் பெருந்தொகை டொலர்கள் SamugamMedia அரச நிறுவனங்களை விற்பதன் மூலம் இலங்கை 4.5 பில்லியன் டொலர்களை திரட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா டெலிகொம் (SriLanka Telecom), லிட்ரோ கேஸ் (Litro Gas), ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering), எயார்போர்ட் கிரவுண்ட் ஹேண்ட்லிங் (Airport Ground Handling), ஹில்டன் ஹோட்டல் (Hilton Hotel) உள்ளிட்டவை அடங்குவதாக இரண்டு அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இலாபம் ஈட்டும் மற்றும் நட்டமடையும் 14 அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 4.5 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் மீது இந்திய தனியார் நிறுவனமொன்று தீவிர ஆர்வம் காட்டி வருவதுடன், கட்டாரும் சில சொத்துக்கள் மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே பொதுச்சொத்துகளின் பங்கீடு என்றும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement